Wednesday, August 25, 2010

மனித உடம்பு-HUMAN BODY

மனித உடம்பு எனும் அதிசயம்!


நாம் எதையெதையோ அதிசயம் என்று சொல்கிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான். கீழ்க்கண்ட உண்மைகளைப் படித்தால் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்...


உங்களின் பொது அறிவு கூடக் கூட, நீங்கள் கனவு காண்பது அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மனிதர்களுக்குச் சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது.


மனித உடம்பில் பெரிய செல், பெண்ணின் அண்டம். சிறிய செல், ஆணின் உயிரணு.


நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.


சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்.


உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக் கின்றன. மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன.


நமது மூளை செல்லால் `என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கலைக் களஞ்சியம் போல 5 மடங்கு தகவல்களை வைத்திருக்க முடியும்.


இரண்டு பாதங்களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன.

உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஒரு `பிளேடை' கரைத்துவிட முடியும்.

வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்வதற்கு 7 நொடிகள் ஆகின்றன.

நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணீரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

உங்கள் பல்லின் `எனாமல்'தான் உடம்பிலேயே கடினமான பொருளாகும்.

உங்களின் கட்டைவிரலும், மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்.

****

E Reader இந்தியாவின் முதல் இ - ரீடர் : ஈசி மீடியா அறிமுகம்

புதுமை அறிமுகம்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட டிஜிட்டல் பப்ளிஷிங் நிறுவனமான ஈசி மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம், 15 பிராந்திய மொழிகளை சப்போர்ட் செய்யத்தக்க புதிய இ - ரீடரை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக, ஈசி மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



டபிள்யூடபிள்யூடபிள்யூ. திவிங்ஸ்டோர்.காம் என்ற இணையதளத்தின் மூலம், வாசகர்கள் இந்த புதிய இ-ரீடர் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும், இந்த புதிய இ - ரீடர், 15ம் பிராந்திய மொழிகளை சப்போர்ட் செய்வது மட்டுமல்லாமல், 2 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகப் பதிப்புரைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.



இதில் இ-புத்தகங்கள் மட்டுமல்லாமல், ஜெர்னல்ஸ், நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் ஆர்டிகல்களை படிக்க இயலும் என்றும், வாசகர்கள், தங்களுக்குப் பிடித்த புத்தகத்தில் உள்ள பகுதியை எங்கும், எந்த நேரத்திலும், எந்த கால சூழ்நிலையிலும், தங்க ளுக்கு பிடித்த மொழி களில் படிக்க முடியும் என்பதே, இந்த புதிய இ - ரீடரின் சிறப்பு என்று அதில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.



இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், இந்த இ-ரீடரின் மூலம் செய்தித் தாள்களை வாசிக்க முடியும், இதற்காக, இந்தியாவின் முன்னணி செய்தி சேவை நிறுவனமான அய்ஏஎன்எஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த புதிய
இ - ரீடரில் புத்தகங்களை வாசிப்பதோடு மட்டும் நினறுவிடாமல் இசையைக் கேட்கலாம், பிரவுசிங் செய்யலாம், கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடலாம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன்  இ-ரீடர்வடிவமைக்கப் பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****